ஸ்டிக்மா என்பது கறை_டாக்டர் அன்புதுறை

ஸ்டிக்மா என்பது கறை இழுக்கு இவை மனநோய்க்கு அதன் வழியை விட அவமானத்தை ஏற்படுத்தும்

மனநோய்யால் நம்பிக்கை மற்றும் உதவி அற்றவர்களுக்கு மேலும் பரவலான நியாயமற்ற சுமையை கூற்றுகின்றது

சிலநேரங்களில் மனநோய்க்களின் நிறம், தோற்றம், செயல், பேசும் முறைகள், மிகைப்படுத்தி பேச படுவதாலேயே இறுதியில் இவர்களை இயலாதவர்களாக ஆக்கிரது।

ஸ்டிக்மா போன்ற இழுக்கு பழியை எதிர்கொள்வதைக்காட்டிலும் மனநோய்க்கான காரணமறந்து அதைத்தாங்கி குணப்படுத்துவது எளிமையாக உள்ளது

ஸ்டிக்மா என்பது பயம், வெறுப்பு மற்றும் அகந்தையின் கூட்டு அதாவது நோய் வருவது பரிச்சயம் இல்லாத பிரச்சனை எனக்கும் மற்றும் என்னை சார்த்தனவர்களும் மனநோய்யால் துன்படமாட்டோம் என்பதாகும்

துன்பப்படுத்தி, தனிமைப்படுத்தி, புறக்கணித்து, இகழந்துபேசி, கேலிசெய்தல் போன்றவற்றால் ஸ்டிக்மா மனநோய்யாளிகளை கடுமையாக தண்டிக்கிறது

ஒருவர் மனநோய்க்கான காரணமறிந்து முழுமையாக குணமடைந்த பிறகு கண்ணுக்கு புலப்படாத மதிப்பை குறைக்கும் ஸ்டிக்மாவால் அவர்கள் உற்றார் மற்றும் உறவினர் மத்தியில் தனிமைபடுத்தப்பட்டு மரியாதை குறைவது பெரிய வலியை அவர்களுக்குக்கொடுக்கும்

ஸ்டிக்மா விழிப்புணர்ச்சியையும், உதவி பெரும் வாய்ப்புகளையும் தடுப்பதில் மூலமாக தரமான சிகிச்சையை தரவிடாமல் தடுக்கிறது।

மனநோய் கண்டவர்களின் நிலை பொதுவாகவே சிதிக்மாவை ஈர்க்கவல்லதாக இருப்பதால் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் மூலம் ஏற்படும் விழிப்புணர்வு கூட பயனற்று பொகிறது

மனம் சார்ந்த நோய், குடும்பச்சச்சரவு, தொற்றுநோய், வேலை சார்ந்த பிரச்சனை, ஜாதி, மதம், பாலியல் போன்ற வற்றாலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டிக்மா என்னும் கறை மனித சமுதாயத்திருந்து போர்க்கால அடிப்படையில் முற்றிலுமாக அகற்றப்படவேண்டும்

ஸ்டிக்மா போன்ற இழுக்கு முற்றியலுமாக அகற்றப்பட்டு புரிதல், கருணை,
சமத்துவம் போன்றவற்றால் ஸ்டிக்மாவை மாற்றியமைக்க வேண்டும்

மனநோய் உற்றவர்கள் மனநோய்யால் பாதிக்கப்பட்டு அதை சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் அலட்சியமாக வெட்கமில்லாமல் கொடூரமாக காயப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தும் இந்த அவலநிலை மனித தன்மை அற்றது

– டாக்டர் அன்புதுறை

Kindly go through our website and do support anyone in need of mental healthcare. Our experts are available to serve them 24/7.
Helpline: 99402 21212

Follow us on:
Youtube : www.youtube.com/wowmentalhealth
Facebook : www.facebook.com/wowmentalhealth
Twitter : https://twitter.com/wowmindclinic
Instagram : www.instagram.com/wowmentalhealth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *